ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2017ம் ஆண்டின் அரையாண்டு முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. கடந்த ஆறு மாதத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரும் லாபத்தைக் கொடுத்த தமிழ்ப் படங்கள் இல்லை என்பதுதான் உண்மை. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த 'பாகுபலி 2' படம் மட்டுமே 100 கோடி ரூபாயை இங்கு வசூலித்தது. மற்ற எந்த தமிழ்ப் படங்களும் 100 கோடி ரூபாயைக் கடக்கவில்லை.
இந்திய அளவில் இந்த அரையாண்டில் அதிகம் வசூலித்த 'டாப் 10' படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 82 கோடி ரூபாய் வசூலித்து 'பைரவா' படம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 1370 கோடி வசூலித்து 'பாகுபலி 2' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹிந்திப் படமான 'ரயீஸ்' 184 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தெலுங்குப் படமான 'கைதி நம்பர் 150' படம் 140 கோடி வசூலித்து 6வது இடத்தைப் பிடித்துள்ளது. மற்றொரு தெலுங்குப் படமான 'துவ்வட ஜகன்னாதம்' 84 கோடி வசூலித்து 9வது இடத்தில் உள்ளது.
தமிழில் 'பைரவா' படம் 82 கோடி ரூபாயைப் பெற்று முதலிடத்திலும், 'சிங்கம் 3' 78 கோடி ரூபாய் வசூலித்து இரண்டாமிடத்திலும், 'போகன்' 32 கோடி வசூலித்து மூன்றாமிடத்திலும், 'எமன்' 21 கோடி வசூலித்து நான்காம் இடத்திலும் உள்ளது.
அடுத்த அரையாண்டு படங்களுக்குள் கடும் போட்டி ஏற்படலாம். குறிப்பாக 'விவேகம், மெர்சல்' ஆகிய படங்கள் அந்தப் போட்டியில் இருக்கும்.