14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து அதே சேனலில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக சொல்லிக்கொண்டு அந்த சீரியலை விட்டு விலகினார் பிரியா பவானி சங்கர்.
அதையடுத்து அவருக்கு திருமணம் நடைபெறயிருக்கிறது. அதனால்தான் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது எந்த படம் என்பது சஸ்பென்சாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர், வைபவ் நாயகனாக நடித்துள்ள "மேயாத மான்" என்ற படத்தில் நாயகியாக நடித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. ரத்னகுமார் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கிறது.