சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்க நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் டீசரைக் கூட கௌதம் மேனன் வெளியிட்டுவிட்டார். டீசர் வெளிவந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. படத்தின் சில பாடல்களைக் கூட யார் இசையமைப்பாளர் என்று சொல்லாமலே வெளியிட்டுவிட்டார்.
இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ஆரம்பித்து நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படம் கூட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தை ஜுலை மாதம் 28ம் தேதி வெளியிட உள்ளார்கள். ஆனால், 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீடு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
கௌதம் மேனன் என்றாலே தாமதம் என்றாகிவிட்டது. அவர் இயக்கும் படங்கள் ஒன்று கூட குறித்த நேரத்தில் வருவதில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரும் வருத்தம்தான். கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றதும் தனுஷ் ரசிகர்களும் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீக்கிரமே 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டைப் பற்றி கௌதம் மேனன் அறிவிப்பாரா...?.