மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் 'பீச்சாங்கை' படத்தை கர்ஸா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் படத்தின் ஹீரோவான ஆர்.எஸ்.கார்த்திக்கே தயாரிக்கிறார். இந்த படத்தை இம்மாதம் 15 - ஆம் தேதி, வியாழக் கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் படங்கள் வெளியாகும். அஜித், விஜய், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்கள் தங்களின் படங்களை வியாழக்கிழமைகளில் ரிலீஸ் செய்தனர். முன்னணி ஹீரோக்கள் என்பதால் அவர்களது படங்களுக்கு வியாழக்கிழமை ஓப்பனிங் கிடைத்தது. அதேபோல் தன்னுடைய பீச்சாங்கை படத்துக்கும் வசூல் கொட்டும் என்ற நம்பிக்கையில் வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
'பீச்சாங்கை' படம், இடது கை பழக்கமுள்ள ஒரு பிக்பாக்கெட் திருடனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.