ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தில் விவேக் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் அஜித். வேதாளம் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், பல மாதங்கள் ஓய்வுக்குப்பிறகு விவேகம் படத்தில் நடித்தார். பெருவாரியான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி மாதம் டைட்டீலுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சிறுத்தை சிவா.
முக்கியமாக, அந்த போஸ்டரில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் அஜித் நின்றதால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். அதனால் விவேகம் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. இந்த நிலையில், விவேகம் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி விவேகம் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அந்த செய்தியை தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் வழக்கம்போல் அஜித்தின் இந்த டீசரையும் உலக அளவில் டிரண்டிங் செய்து விட வேண்டும் என்று அவரது ரசிககோடிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.