ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மெட்டி ஒலி தொடரில் போஸ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் வெங்கட். அதன்பிறகு அவரது பெயரும் போஸ்வெங்கட் என்று மாறிவிட்டது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையிலிருந்து விலகிய போஸ்வெங்கட் சினிமாவில் அறிமுகமானார். கண்ணம்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவருக்கு அதன்பிறகு ஹீரோ கேரக்டர் கிடைக்கவில்லை. வில்லன், குணசித்திர வேடங்களில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகளுக்கு பிறகு தற்போது கவண் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சின்னத்திரையை கைவிட்டேன். அதன் பிறகு பல சின்னத்திரை வாய்ப்புகள் வந்தபோதும் தவிர்த்தேன். கடுமையான உழைப்பும், போராட்டமும் இருந்தாலும் சொல்லிக் கொள்கிற அளவிற்கு கேரக்டர்கள் அமையவில்லை. நகரம், சிவாஜி, கோ படங்கள் ஓரளவிற்கு அடையாளம் கொடுத்தது. கவண் படத்தில் வில்லன் கேரக்டர் பற்றி என்னிடம் சொல்லி அதில் நடிக்க தகுதியான இரண்டு நடிகர்களின் போட்டோவை கொடுத்து இதில் இந்த கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்றார் கே.வி.ஆனந்த் சார். நான் பிரகாஷ்ராஜ் சார் சரியாக இருப்பார் என்றேன். அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் தலையை மழிக்க முடியாது என்று சொன்னார்கள். இன்னொருவர் தெலுங்கு நடிகர் நான் அவருக்கு டப்பிங் பேசுகிறேன். என்றேன்
அந்த கேரக்டருக்கு முன்வழுக்கை தலை தோற்றம் மிகவும் முக்கியம். திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. மறுநாள் நானே முன்தலையை மழித்துக் கொண்டு ஆனந்த் சார் முன்பு நின்றேன். அவருக்கு ஆச்சர்யம் ஆனாலும் அவருக்கு திருப்பி இல்லை. தோற்றம் மட்டும் போதாது சென்னை தமிழ் பேச வேண்டும் என்றார். ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார். நடித்துக் காட்டினேன். சென்னை தமிழ் பேசிக் காட்டினேன். அதன் பிறகு தேர்வு செய்து இன்னும் 10 கிலோ வெயிட் போடுங்க என்றார் அதன்படியே செய்து கவண் படத்தில் வில்லன் ஆனேன். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது. என்கிறார் போஸ் வெங்கட்.