தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, தமிழ் திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர். கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் டுவிட்டர், பேஸ்புக் வாயிலாக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானும் இந்த தீர்ப்பு குறித்து கவிதை வடிவில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்,
அடிமைகளின் கூட்டம் கண்டேன்
அகமகிழ்ந்து பேச கேட்டேன்
ஆயாவை தலைவியாக்கிவிட்டு
ஆனந்த கூத்தாட கண்டேன்
வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம்
வெட்கத்தை தொலைக்க கண்டேன்
மூத்தோரென்று சொல்லப்பட்டோர்
முட்டாள்களாய் நிற்க கண்டேன்
களவு செய்யும் வாய்ப்பிற்காக
கைகூப்பி நிற்க கண்டேன்
பெண்ணின் காலில் விழுவதனை
பெருமையாக நினைக்க கண்டேன்
பணமொன்றே நோக்கமென்று
பல்லிளித்து சிரிக்க கண்டேன்
பச்சோந்தியும் தோற்றுப்போகும்
பகல்வேஷ நடிப்பு கண்டேன்
காசு பணம் சுருட்டிடவே
காலில் விழும் கூட்டத்திற்கு
ஈனம் மானம் எதுவுமில்லை
என்பதையும் அறிந்து கொண்டேன்
எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும்
ஏன் தோன்றவில்லை என்றால்
கைமாறிய பண கட்டிற்காக
கட்டுகோப்பை காட்டுகின்றார்
உங்களின் திருட்டு எண்ணம்
ஒருபோதும் நிறைவேறிடாது
அடிமட்ட தொண்டனெல்லாம்
அனலெனவே கொதிக்க கண்டேன்
இனியும் உங்கள் மாய்மாலம்
இங்கு பலிக்காது சொல்வேன்
தடயமின்றி அழித்தொழிக்க
தயாராகவே மக்கள் உள்ளார் !
தங்கர்பச்சன் (ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர்)
தங்கர் பச்சானின் இந்த பதிவு சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தையும் அவர்களுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏ.,க்களையும் சுட்டிக்காட்டுவதாகவே தெரிகிறது.