ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுசீந்திரன் இயக்கி உள்ள படம் மாவீரன் கிட்டு. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார், ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லுசாமி பிச்சர்ஸ் சார்பில் தாய் செல்வனும் (சுசீந்திரன் தம்பி), ஏசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் சந்திரசாமியும் தயாரித்துள்ளனர். மாவீரன் கிட்டுவின் கதை இதுதான்:
1985ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை. அதை கற்பனை கலந்து உருவாக்கி உள்ளார் சுசீந்திரன். பழனி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் கிட்டு. அவனுக்கு படித்து கலெக்டராகி பின்தங்கியுள்ள தனது ஊரையும் மக்களையும் உயர்த்த வேண்டும் என்கிற ஆசை. அந்த ஆசையயை தூண்டிவிடுகிறார் பிரிண்டிங் பிரஸ் நடத்தும் பார்த்திபன். அவர் ஒரு சீர்திருத்த இயக்கத்தின் பிரமுகர்.
பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் கிட்டு. தனது லட்சியமான கலெக்டர் ஆவதற்கு அவன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. நன்றாக படிக்கும் ஒருவனை ஏழை சமூகத்திலிருந்து வந்தவன் என்பதற்காக அவனை எப்படியெல்லாம் தடுக்கிறது இந்த சமூகம் என்பது திரைக்கதை. கிட்டு கலெக்டர் ஆனாரா, அல்லது பாதை மாறினாரா என்பது மீதிக் கதை. இதற்கிடையில் உள்ளூர் பெண்ணான கோமதியுடன் காதல் தனி கதை. வழக்கமான சுசீந்திரன் படமாக இல்லாமல் ஆக்ஷன் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வளர்ந்துள்ளது. வெற்றிகொடிகட்டு படத்தில் பார்த்திபன் வடிவேலுவை கலாய்த்து காமெடி செய்ததை போல இதில் தன்னுடைய பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்யும் சூரியை கலாய்த்து எடுக்கிறார் பார்த்திபன்.