ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடிக்கும் பைரவா படம் வேகமாக தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ், அபர்னா வினோத், சதீஷ், ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி உள்ளார்.
பைரவா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பரபரப்பான ஆக்ஷன் படத்திற்கான ட்ரீட்மெண்ட் அந்த டீசரில் காணப்படுகிறது. நீரை கிழித்துக்கொண்டு பதியும் கால் தடத்துடன் தொடங்கும் டீசரில் "யார்டா அவன்?" என்று ஜெகபதிபாபு ஆக்ரோஷத்துடன் கேட்கிறார். "தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு அதிகமாக இருக்கணும்" என்று பஞ்ச் அடிக்கிறார் விஜய். "நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்கு" என்கிறார்.
"நீ என்ன பெரிய வசூல் மன்னனா?" என்று கேட்கும் மைம் கோபியிடம் காசை சுண்டிவிட்டபடி "தெரியல அப்படித்தான்" பேசிக்கிறாங்க என்கிறார். சண்டைக்கு வரும் வில்லன்களிடம் அஜித் தெறிக்கவிடலாமா என்று கேட்டதை போல விஜய் "விளையாடலாமா?" என்று கேட்கிறார். டீசர் முடியும் போது "எப்ப வரணும்னு சொல்லணுமா?" என்கிறார். கூடவே ‛‛வரலாம் வரலாம் வா பைரவா...'' என அருண்காமராஜின் குரலில் பாடல் ஒலிக்கிறது.
ஆக்ரோஷமான சண்டை காட்சியின் ஷாட்கள் இணைக்கப்பட்டுள்ளது. இடையிடையில் கீர்த்தி சுரேஷ் வந்து கண் சிமிட்டிச் செல்கிறார். இன்னொரு டீசரில் பாடல்களின் ஷாட்களும், காதல் ரொமான்சுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் கதை என்ன? என்பது பற்றிய தகவல்கள் டீசரில் இல்லை. இணைய தளங்களில் லைக்ஸை அள்ளி வருகிறது பைரவா டீசர்.