ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'த்ரிஷ்யம்' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை தென்னிந்திய மொழியில் உள்ள படைப்பாளிகள் மற்றும் நடிப்பு வெறிகொண்ட நடிகர்களின் தூக்கத்தையும் தனது புலி முருகன்' படம் மூலமாக கெடுத்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. பொதுவாக மலையாளத்தில் ஹிட்டாகும் படங்களை தமிழில் ரீமேக் பண்ணுவது வாடிக்கை தான் என்றாலும். பாடிகார்ட், த்ரிஷ்யம் போன்ற வெகு சில படங்களே இந்தியுடன் சேர்த்து மற்ற தெனிந்திய மொழிகளிலும் ரீமேக்காகும் சாதனையை செய்துள்ளன.. அதேசமயம் மற்ற மொழியினருக்கு ரீமேக் செய்வதில் சவாலையும் கொடுத்துள்ளன..
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள மோகன்லாலின் 'புலி முருகன்' படமும் அப்படி அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் சாத்தியம் உள்ள படம் தான்.. அதற்கான ரீமேக் ரைட்ஸும் நல்ல விலைக்கு போயுள்ளது.. ஆனால் சிக்கல் என்னவென்றால் 56 வயதான மோகன்லால் டூப் எதுவும் போடாமல் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்த அந்த புலி முருகன் கதாபாத்திரத்தில் இங்கே நடிக்கப்போகும் அந்த ஹீரோ யார் என்பது தான். இப்போதே விஜய், சூர்யா போன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தலாம என ரைட்ஸ் வாங்கியவர்கள் யோசித்தபடி இருக்க, விக்ரமோ நமக்கு 'புலி முருகன்' செட்டாகுமா என யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். அதேசமயம் கமலை இதில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.