ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தேவி' படத்திற்குப் பிறகு விஜய் இயக்க உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சாயிஷா சைகல் அறிமுகமாகிறார். பொதுவாக ஜெயம் ரவி தன்னுடன் நடிக்கும் ஜோடி யார் என்பதில் அதிக கவனம் உள்ளவர். விஜய், அஜித்துடன் ஜோடியாக நடிப்பவர்கள் கூட ஜெயம் ரவியுடன் ஜோடி சேரத் தயங்க மாட்டார்கள். அசின், த்ரிஷா, ஜெனிலியா, தமன்னா, ஹன்சிகா, லட்சுமி மேனன் என அந்தந்த சமயங்களில் யார் முன்னணி நடிகையாக இருக்கிறார்களோ அவர்களுடன்தான் ஜெயம் ரவி ஜோடி சேர்ந்து நடிப்பார்.
ஆனால், இப்போது விஜய் இயக்கும் படத்தில் புதுமுகம் சாயிஷா சைகலுடன் அவர் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. சாயிஷா சைகல், ஹிந்தி நட்சத்திரங்கள் திலீப்குமார், சாய்ரா பானுவுக்கு உறவினர் ஆவார். சாயிஷா சைகல் தெலுங்கில் அறிமுகமான 'அகில்' படம் படுதோல்வி அடைந்த ஒரு படம். இத்தனைக்கும் அந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமானது நாகார்ஜுனாவின் மகன் அகில். எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் கூட அந்தப் படத்தை யாராலும் ஓட வைக்க முடியவில்லை.
சினிமாவைப் பொறுத்தவரை சென்டிமென்ட் பார்ப்பவர்கள்தான் அதிகம். அதனால் சாயிஷாவுக்கு தெலுங்கில் அடுத்து எந்தப் படங்களும் வரவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் அஜய் தேவகன் இயக்கி நாயகனாக நடிக்கும் 'ஷிவாய்' படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
இருந்தாலும் தெலுங்குப் பட ராசி இல்லாமல், அவர் நடித்துள்ள ஹிந்திப் படம் வெற்றியடைந்து சாயிஷாவிற்கு தமிழிலும் ஒரு நல்ல ராசி அமையட்டும்.