Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குற்றமே தண்டனை', மீண்டும் விருதுகளை அள்ளுவாரா மணிகண்டன் ?

02 செப், 2016 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Did-Manikandan-get-award-again-from-kutrame-thandanai

'காக்கா முட்டை' திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்திய ஒரு யதார்த்த படைப்பாக அமைந்தது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெறக் காரணமாக இருந்தவர் படத்தின் இயக்குனர் மணிகண்டன். அவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள 'குற்றமே தண்டனை' படம் இன்று வெளியாகிறது. இதற்கு முன் சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு மிகப் பெரும் வரவேற்பை இந்தப் படம் பெற்றது. வழக்கமான கமர்ஷியல் சினிமா இயக்குனராக, பணம் சம்பாதிக்க மட்டுமே திரையுலகத்திற்கு வந்த இயக்குனராக அவர் இல்லை என்பது அவரது படைப்புகளைப் பார்த்தாலே தெரியும்.


'காக்கா முட்டை' படத்தைப் போலவே 'குற்றமே தண்டனை' படத்தையும் மிகக் குறைந்த செலவில் தான் படமாக்கியிருக்கிறாராம். 'மைனா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருக்கும் விதார்த், இப்போதே தனக்கு அதற்குரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார். இது ஒரு வழக்கமான த்ரில்லர் படமல்ல என்று சொல்லும் மணிகண்டன் இந்தப் படத்திலும் தன்னுடைய திறமைக்கு மீண்டும் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.


'காக்கா முட்டை' படம் விருதுகளை மட்டும் அள்ளாமல் கமர்ஷியலாகவும் நல்ல வசூலைக் கொடுத்த படமாக அமைந்தது. அதே போல 'குற்றமே தண்டனை' படமும் விருதுகளுடன், வசூலையும் கொடுக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நல்ல படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களின் கையில்தான் உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in