ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் 60 வயதைக் கடந்த சிரஞ்சீவியுடன் ஜோடியா, அல்லது தமிழில் 40 வயதைக் கடந்த அஜித்துடன் ஜோடியா ? என காஜல் அகர்வால் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார் போலிருக்கிறது. சிரஞ்சீவி போன்ற சீனியர் நடிகர்களுடன் நடித்தால் இனி தன்னை இளம் ஹீரோக்கள் எப்படியும் நடிக்கக் கூப்பிட மாட்டார்கள் என நினைத்து 'அக்கட' அதிகமான சம்பளம் கேட்டு சாமர்த்தியமாக நழுவிவிட்டார். அதே சமயம், சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்து அங்கு கேட்டதை விட பாதி சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழில் அஜித் ஜோடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு முன்னணி நடிகையாக வேண்டும் என்றால் விஜய்யுடனோ அல்லது அஜித்துடனோ நடித்தாக வேண்டும். விஜய்யுடன் ‛துப்பாக்கி', 'ஜில்லா' என இரண்டு படங்களில் நடித்துவிட்டார் காஜல். அனைத்து ஹீரோயின்களும் சொல்லுவதைப் போல அஜித்துடன் நடிக்க ஆசை என்று சொல்லி வந்தவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அழைத்துவிட்டது. அஜித்துடன் முதல் முறையாக 'தல 57' படத்தில் நடிக்கப் போகிறார். இன்னும் சில நாட்களில் பல்கேரியா நாட்டிற்குப் பறக்கப் போகிறது படக்குழு. இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழில் காஜல் அகர்வால் முன்னணி நடிகை இடத்தில் கண்டிப்பாக இருக்கப் போகிறார். காஜல் அகர்வால் தான் ஹீரோயின் என்பதை படக்குழு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.