வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
விஜய்யின் அம்மா ஷோபாவின் குடும்பம் ஆரம்பகாலத்தில் லலிதாஞ்சலி என்ற பெயரில் இசைக்குழு நடத்தி வந்தது. அந்தக்குழுவில் ஷோபா பாடகியாக இருந்தார். அவரது தம்பி எஸ்.என்.சுரேந்தரும் பாடகர்தான். அதனாலோ என்னவோ, விஜய்யின் ரத்தத்திலேயே இசையும் ஊறி இருக்கிறது. அவர் நடிகராக அறிமுகமான காலகட்டத்திலேயே, அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இடையில் கொஞ்ச காலமாக பாடாமல் இருந்த விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'துப்பாக்கி' படத்தில் ஹாரிஸின் இசையில் பாடினார். 'கூகுள் கூகுள்' என்ற அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அப்பாடலின் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து அதன்பிறகு வெளிவந்த ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து ஒரு பாடலைப் பாடி வருகிறார் விஜய்.
பெரும்பாலும் டூயட் பாடல்களையே விஜய் பாடி வரும் விஜய், பரதன் இயக்கத்தில் உருவாகிவரும் 'விஜய் 60' படத்துக்காக சந்தோஷ் நாராயணனின் இசையில் வித்தியாசமான பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறாராம்.
'விஜய் 60' படம் பற்றிய மற்றொரு தகவல்.... இந்தப் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படமாக்குவதற்காக அனுமதி கேட்டனராம். அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால் ஸ்டுடியோ ஒன்றில் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற மிகப்பெரிய செட் ஒன்று போடப்பட்டு வருகிறதாம்.