ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்ராஜ், கருணாகரன் நடித்துள்ள படம் 'ஒரு நாள் கூத்து'. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஒரு நாள் கூத்து என்ற படம் குறிப்பிடுவது திருமணத்தை. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் திருமண சடங்கு, சம்பிரதாயங்களை இந்தப் படம் கிண்டல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
இப்படம் யதார்த்தமான, கலகலப்பான, கலர்புல்லான திருமணம் சார்ந்த கதை. ஒவ்வொரு திருமணத்துக்கான ஓட்டமும் திருமணம் முடிந்ததும் நின்று விடுகிறது. திருமணம் இப்போதெல்லாம் சில சூழல்களில் ஒரு திணிப்பாகவும், நிர்ப்பந்தமாகவும், வன்முறையாகவும் மாறி வருகிறது. திருமணத்துக்குப் பிந்தைய தருணங்களைப் பற்றி அதன் விளைவுகளைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை இறுதியாகத் திருமணம், அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது போல் கருதுகிறார்கள் திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள். படம் திருமணத்தை விமர்சிக்கவில்லை. கருத்தும் சொல்லவில்லை. இப்படம் திருமணம் சார்ந்து சில கேள்விகளை எழுப்பி, நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும். என்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.