Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவால்களுடன் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம்: அமெரிக்காவிலிருந்து கமல்

26 மே, 2016 - 13:05 IST
எழுத்தின் அளவு:
We-starts-Sabash-Naidu-with-challenge-says-Kamal-in-USA

தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கேரக்டரின் நீட்சியாக இந்த படம் தயராகிறது. இதில் கமல் மகளாக ஸ்ருதி நடிக்கிறார், மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். தெலுங்கு காமெடி நடிகர் பரமானந்தம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார், அக்ஷராஹாசன் இணை இயக்குனராக பணியாற்றுகிறார்.


இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து 40 நாட்கள் அமெரிக்காவில் நடக்கிறது. கமல் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் அமெரிக்கா கிளம்பி சென்று விட்டனர். அங்கிருந்தபடி கமல் விடுத்துள்ள செய்தி வருமாறு: “சபாஷ் நாயுடு என்ற எங்கள் புதிய திரைப்பட படப்பிடிப்புக்கு நானும் எங்கள் திரைக்குழுவைச் சேர்ந்தவர்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் இந்தத் தயாரிப்பின் துவக்க கட்டங்களே முழு வீச்சில் அமைந்துள்ளன.


திரைத்துறையின் ஏறத்தாழ அனைத்து திரைப்படத் தயாரிப்புகளைப் போலவே இதன் தயாரிப்பிலும், அதிலும் குறிப்பாக இத்தனை பிரம்மாண்டமான, நுட்பங்கள் நிறைந்த தயாரிப்பில் தவிர்க்கவே முடியாத, முதல் கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் திறமை வாய்ந்த, புரிந்துணர்வுடன் துணை நிற்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இத்திரைப்படத்துக்கு அமைந்துள்ளது என் நற்பேறு என்று மகிழ்ச்சியடைகிறேன்.


சென்னையில் உள்ள அமெரிக்க கான்சுலேட் தொடர்ந்து அளித்து வரும் நல்லாதரவை இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு படப்பிடிப்பு செல்லும் ஒவ்வொரு முறையும் மிகுந்த புரிந்துணர்வுடன் அவர்கள் எப்போதும் எங்கள் பயணம் இனிமையான ஒன்றாக அமையும் வகையில் ஆகச்சிறந்த உதவி நல்கியுள்ளனர்.


பொதுவாகவே, நம்பகத்தன்மை கொண்ட, நேர்மையான தென்னிந்திய திரைப்பட படப்பிடிப்பு முயற்சிகளை அமெரிக்காவில் மேற்கொள்ளும் எவருக்குமே அவர்கள் ஆதரவாக இருந்துள்ளனர் என்பதை நான் தென்னிந்திய திரைத்துறை சார்பாகவே சொல்வதாகக் கொள்ளலாம். அவர்களது நேசம் மிகுந்த உதவிகளுக்கு நன்றி.


இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in