ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம்பிரபு, ஷாம்லி நடித்து வரும் படம் வீரசிவாஜி. கணேஷ் விநாயக் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்காக டங்காமாரி புகழ் யோகேஷ் “தாறுமாறு தக்காளிசோறு... என்ற பாடலை எழுதியுள்ளார். இதனை இமான் இசையில் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியது உள்ளது.
“பாடல் சிறப்பாக வந்திருப்பதால் இதனை இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத லொக்கேஷினல் நடத்த விரும்பினோம். ரஷ்யாவில்தான் அதிக தமிழ் படங்கள் படமாக்கப்பட்டதில்லை. எனவே அங்கு சென்று படப்பிடிப்பு நடத்த தீர்மானித்தோம். தினேஷ் மாஸ்டர் தலைமையில் நடன கலைஞர்களும், இயக்குனர் தலைமையில் தொழில்நுட்ப கலைஞர்களும், ஹிரோ விக்ரம் பிரவும், ஹீரோயின் ஷாம்லியும் ரஷ்யா செல்கிறார்கள். வருகிற ஜுன் 1ந் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. அது முடிந்ததும் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்கிறார். படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால்.