விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்கார துரை என மீடியம் பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் இயக்குநர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில். வெள்ளக்கார துரை படத்திற்கு பிறகு தற்போது எழில் இயக்கியுள்ள படம் - 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், டார்லிங் பட நாயகியான நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் எழில் உடன் இணைந்து தன்னுடைய மனைவி ரஜினி நட்ராஜ் பெயரில் இணைந்து தயாரித்திருக்கிறார் விஷ்ணு விஷால். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்திற்கு ஜி.சத்யா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வருகிற மே 6 -ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 'இன்று நேற்று நாளை' வெற்றிப் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் படம் இது. 'வெள்ளக்கார துரை' வெற்றிப் படத்தை தொடர்ந்து எழில் இயக்கும் படம் இது. இந்த இரண்டு பாசிட்டிவ்வான வைப்ரேசன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
6 -ஆம் தேதி நடைபெற உள்ள பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து இப்படம் விரைவில் வெளியாகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் அனைத்து வேலைகளும் முடிவடைந்தநிலையில் சீனுராமசாமி இயக்கியுள்ள 'இடம் பொருள் ஏவல்' படம் வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கிறது.