ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அதன் காரணமாக அவர் நடித்த படங்களின் கன்னட ரீமேக் ரைட்ஸ் நல்லவிலைக்குப் போகிறது. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கன்னடத்தில் ஆத்யக்ஷா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆத்யக்ஷா மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அப்படத்தைத் தயாரித்த ராமு என்ற தயாரிப்பாளர் தற்போது ரஜினி முருகன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார். பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ரஜினி முருகன் வசூலை வாரிக் குவித்தது. சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடித்த வேடத்தில் ஷரண் மற்றும் சிக்கனா இருவரும் நடிக்கின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கன்னட ரீமேக்கிலும்கூட சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடித்த வேடத்தில் ஷரண், சிக்கனா இருவரும்தான் நடித்தனர்.
ராஜ்கிரண் வேடத்தில் நடிக்க அம்பரீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ரஜினி முருகன் படத்தின் கன்னட ரீமேக்குக்கு ராஜ் விஷ்ணு என்று பெயர் வைத்துள்ளனர். அதாவது இங்கே ரஜினியைப்போல் கன்னடத்தில் ராஜ்குமார்தான் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார். அந்த அடிப்படையில் அவரது பெயரில் பாதியைக் கொண்டு டைட்டில் வைத்துள்ளனர்.