பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த வித்தியாசமான, முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளிவந்த படம் தில்லு முல்லு. இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதேப்படத்தை இயக்குநர் பத்ரி, மிர்ச்சி சிவாவைக் கொண்டு ரீ-மேக் செய்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தீவிர ரஜினி ரசிகர் என்று சொல்வதை விட வெறியர் என்று சொல்லாம்.
அவரிடடத்தில் சமீபத்தில், ரஜினி நடித்த படங்களில் எந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று சிவகார்த்திகேயனிடம் ஒரு பத்திரிகை கேள்வி எழுப்பியது. அதற்கு சிவகார்த்திகேயன், “ரஜினியின் தில்லு முல்லு படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை.” என்று பதில் சொல்லி இருக்கிறார்.
அதேசமயம், 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக்கில் 'மிர்ச்சி' சிவா நடித்ததும், அந்தப்படம் தோல்வியடைந்ததும் உலகறிந்த விஷயம். இதெல்லாம் தெரிந்தும் மிர்ச்சி சிவாவை நக்கல் அடிக்க பதில் சொல்லியிருக்கிறாரா.? சிவகார்த்திகேயன்.