ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. அப்பா இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சின்னத்தம்பி படத்தில் சின்ன வயது பிரபுவாக நடித்து பிரபலம் ஆனார். அதன் பிறகு பி.வாசு தனது இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படத்தில் வாசுவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையாதது சக்திக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்து மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் என்னை படங்களில் நடித்தார். இதில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் சுமாராக போனது மற்றவை தோல்வி படங்கள். கள்ளச்சிரிப்பழகா என்ற படம் டிராப் ஆனது.
2012க்கு பிறகு சக்திக்கு கையில் படங்களே இல்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வருடத்திற்கு பிறகு தற்காப்பு பட வாய்ப்பு வந்தது. போலீஸ் அதிகாரியாக நடித்தார். படத்திற்காக உடம்மை ஏற்றி மிடுக்குடன் நடித்தார். படம் வசூல்ரீதியாக சுமாராக இருந்தாலும் சக்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
2016 சக்திக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது. சக்தி என்ற தன் பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றிக் கொண்டார். தற்போது பி.வாசுவின் இயக்கதில் கன்னடத்தில் தயாராகும் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்து தெலுங்கில் பிரேமம் என்ற படத்தில் நடிக்கிறார் இதில் அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். சிவலிங்கா படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும்போது அதில் சக்தி நடிப்பார் என்று தெரிகிறது.