ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர்கள் நடிகராவது புதிய விஷயமில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்கள் கடந்த காலங்களில் நடிகர்களாகி இருக்கிறார்கள். முன்னணி கதாநாயகனாக விளங்கி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரண் ஆரம்பத்தில் படத்தயாரிப்பாளராக இருந்தவர்தான். பிரமிட் நடராஜன், ஜெயப்பிரகாஷ்,அழகன் தமிழ்மணி ஆகியோர் கூட தயாரிப்பாளர்கள் தான்.
இந்த வரிசையில். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ 9 புரடக்ஷன்ஸ் ஆர்.கே.சுரேஷும் சேர்ந்துள்ளார். பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் இவர்தான் மெயின் வில்லன். படம் முழுக்க பட்டையைக் கிளப்பியுள்ள இவர், தாரை தப்பட்டை படம் வெளிவருவதற்கு முன்பே விஷால் நடிக்கும் மருது படத்தில் வில்லனாக கமிட்டாகிவிட்டார்.
இந்தப்படம் தவிர சிங்கம்-3 படத்திலும் இவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தாரை தப்பட்டை படம் வெளியான பிறகு ஆர்.கே.சுரேஷ் வில்லனாக ஒரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்.