மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் என சென்ட்டிமென்ட் படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் எழில். ராஜா, அமுதே, தீபாவளி போன்ற படங்கள் அவருக்கு சரியாக அமையாமல் போகவே சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
5 வருடங்களுக்கு பிறகு திடீரென காமெடி படங்களுடன் களம் இறங்கினார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளக்காரதுரை படங்கள் கிராமத்து காமெடி படங்களாக இருந்தது. இந்த படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது.
அதனால் தற்போது மீண்டும் மினிமம் கியாரண்டியுடன் அதே வில்லேஜ் காமெடியுடன் அடுத்த படத்தையும் எடுத்து முடித்து விட்டார். படத்திற்கு தலைப்பு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', இதில் விஷ்ணு ஹீரோவாகவும், நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். ரவிமரியா காமெடி வில்லன். சத்யா இசை அமைக்கிறார், சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.