ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமாரை வைத்து பாலா இயக்கி வரும் 'தாரைதப்பட்டை' படம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். ரிலீஸ் தேதியை அறிவித்த உடனே தாரை தப்பட்டை படத்தின் வியாபாரம் சூடு பிடித்துவிட்டது. முதல் வியாபாரம் முடிந்திருக்கிறது அண்மையில். தாரை தப்பட்டை படத்தின் சென்னை விநியோக உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது. மதுரை ஏரியாவின் விநியோக உரிமையை மதுரை அன்புச் செழியனின் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' வாங்கியுள்ளது.
இந்த வியாபாரம் ஒரு பக்கம் இருக்க, இப்படத்தின் சாட்டிலைட் உரிமையைபெரிய தொகைக்கு விஜய் டி.வி. வாங்கியுள்ளது. பாலாவின் 'பி ஸ்டுடியோஸு'ம் சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்ஷன்ஸ்' நிறுவனமும் இணைந்து தாரை தப்பட்டை படத்தைத் தயாரித்துள்ளதாக சொல்லப்பட்டாலும், பாலா பணம் முதலீடு செய்யவில்லை. தன் சம்பளத்தையே தன்னுடைய ஷேராக வைத்துள்ளதால் அவரும் ஒரு தயாரிப்பாளராகிவிட்டார்.
சசிகுமாரருக்கு இணையாக, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் 1000-வது படம் இது என்று சொல்கிறார்கள். எனவே அவரைப் பாராட்டி பிரம்மாண்டமான முறையில் விழா எடுக்கவும், அந்த விழாவில் தாரை தப்பட்டை படத்தின் ஆடியோவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனுமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.