14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'சாட்டை' படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் சவுகார்பேட்டை. இதில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் வெளிவருகிறது. 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கி உள்ளார்.
இதில் ஸ்ரீகாந்த் மந்திரவாதி, வடசென்னை இளைஞன் என்ற இரு கேரக்டரில் நடித்துள்ளார். ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். அதோடு இருவரும் பள்ளி மாணவர்களாகவும் நடித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறியதாது:
கதைப்படி ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பார்கள். பருவ வயதுக்கு வந்ததும் அது காதலாக மாறும். பள்ளி பருவ காட்சிகளை குழந்தை நட்சத்திரத்தை வைத்து எடுக்கலாம் என்றுதான் முதலில் முடிவு செய்தோம். சூர்யா, தனுஷ் பள்ளி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். நாமும் முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. ஸ்ரீகாந்துக்கும், ராய் லட்சுமிக்கும் மேக்அப் டெஸ்ட் நடத்தி பார்த்தோம். அது கச்சிதமாக பொருந்தியதால் அவர்களையே நடிக்க வைத்தோம். என்கிறார் வடிவுடையான்,