ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அக்டோபர் 21 ஆயுதபூஜையைவிட்டால் அடுத்த பண்டிகை தினம் என்பது தீபாவளிதான். அன்றைக்கு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்', அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் ரிலீசாகவிருப்பதால் மற்ற படங்கள் பின்வாங்கிவிட்டன. தனுஷ் நடித்த தங்கமகன் போன்ற படங்கள் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டன.
இந்தநிலையில், 'தூங்காவனம்', 'வேதாளம்' படங்களுக்குப் போட்டியாக நகுல் ஹீரோவாக நடித்திருக்கும் 'நாரதன்' படமும் தீபாவளி ரேசில் குதிக்கிறது. நாகா வெங்கடேஷ் இயக்கியிருக்கும் 'நாரதன்' படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகேஷா பட்டேல் நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம்ஜி காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, நாரதன் என்பதே அவரது கேரக்டரைத்தான் குறிக்கிறது. சஜித் வி.நம்பியார் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசை அமைத்துள்ளார்.
நாரதன் படத்தின் டிரைலரும், பாடல்களும் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் மிக துணிச்சலாக தீபாவளி அன்று கமல், அஜித் படங்களுடன் மோதுகிறது. மொத்தம் உள்ள தியேட்டர்களை 'தூங்காவனம்', 'வேதாளம்' படங்களே ஆக்ரமித்துக்கொண்டுவிடும். நாரதன் படத்துக்கு தியேட்டர் கிடைக்குமா? பார்க்கலாம்.