ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாவின் 'பரதேசி'க்குப் பிறகு வேதிகாவுக்கு நடிக்கும் வாய்ப்புள்ள கேரக்டர்கள் தேடி வருகிறது. அப்படி வந்தது தான் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்'. அந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பில் புதியமுகம் காட்டிய வேதிகா, அந்தப்படத்தில் தன்னை சீரியஸாக காதலித்த பிருத்விராஜை டீலில் விட்டார். தொடர்ந்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்த அவர், தற்போது மலையாளத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
குறிப்பாக காவியத்தலைவனில் தான் டீலில் விட்ட பிருத்விராஜுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக, இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதுதான் ஹைலைட். இந்தப்படத்தை இயக்கவிருக்கும் சுஜித் வாசுதேவன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர். மலையாள த்ரிஷ்யம், தமிழ் பாபநாசம் ஆகிய படங்களில் ஜீத்து ஜோசப்பின் கண்களாக இருந்து வெற்றிகளை கொடுத்த ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரார். அதுமட்டுமல்ல பிருத்விராஜின் பல படங்களுக்கு கேமராமேனாக ஒளிப்பதிவு செய்தவர். இந்தப்படத்திற்கு 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்' என பெயர் வைத்துள்ளார்கள்.