ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் பல படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ராணா, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் தனது அசத்தலான வில்லத்தனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். டோலிவுட்டின் வெற்றிப் பட தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா கடந்த 2004ல் வெளிவந்து குழந்தைகளைக் கவர்ந்த மொம்மலாட்டா எனும் படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ராணா மராத்தி வெற்றிப் படமான போஸ்ட்டர் பாய்ஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். போஸ்ட்டர் பாய்ஸ் படத்தை தெலுங்கில் இயக்குநர் கோபி கணேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் ராணாவுடன் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமாரும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த பேபி படத்தில் ராணா இணைந்து நடித்திருந்தார். தற்போது மீண்டும் இருவரும் தயாரிப்பாளராக தெலுங்கு படத்தில் இணையவுள்ளனர்.