ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்திரா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனுஹாசன் கதாநாயகியாக தற்போது வல்லதேசம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் இவர். இந்திரா படத்துக்குப் பிறகு ஒரு சில படங்களில் அக்கா அண்ணி அம்மா என குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் அனுஹாசன்.
பிறகு காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய அனுஹாசன், திடீரென மீடியா வெளிச்சத்திலிருந்து விலகிப்போனார்.
பெரிய திரைக்கும், சின்னத்திரைக்கும் டாட்டா காட்டிவிட்டு போன அனுஹாசன் எங்கிருக்கிறார் என்றே தெரியாதநிலையில், வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டு தற்போது லண்டனில் வசிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் லண்டனில் உள்ள சேரிங் கிராஸ் பகுதியில் அனுஹாசனை தற்செயலாக சந்தித்த ஈழத்தமிழரான என்.டி.நந்தா, அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வல்லதேசம் படத்தின் கதையைச் சொல்லி நடிக்க அழைத்திருக்கிறார்.
வல்லதேசம் படத்தின் கதை பிடித்துப்போய் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அனுஹாசன். பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகனான எல்.வி.முத்துகுமாரசாமி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். எல்.வி.முத்துகுமாரசாமியின் அம்மாவும், நடிகர் சிம்புவின் அம்மாவும் சகோதரிகள். அந்தவகையில் இசையமைப்பாளர் எல்.வி.முத்துகுமாரசாமி சிம்புவுக்கு உறவினர். அந்த உரிமையில் வல்லதேசம் படத்தில் சிம்புவை அழைத்து ஒரு பாடலைப் பாட வைத்திருக்கிறார்.