ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்தில் தங்களுக்கென இணையதளம் தொடங்கினாலும் பலவும் அப்டேட் செய்யாமல் தொடங்கியது போல அப்படியே இருந்து கொண்டு பல்லைக் காட்டுகின்றன. சிலர் மட்டுமே தங்கள் தளங்களில் ரசிகர்களின் ஃபேன் க்ளப்பில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அதிகப்படங்கள் இல்லாத ஓய்வு நிலையில் இருக்கும் இளையராஜாவின் ரசிகர்கள் தளம் அண்மையில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. காரணம் அதில் அவர் காட்டிய ஆர்வமும் கொடுத்த ஊக்கமும் தான் ஜூன்- 2ல் பிறந்தநாளில் அவருக்கு இணைய உலகில் வாழ்த்துக்கள் குவிந்தன. ஜூன் -3ல் பிறந்தநாள் கொண்டாடிய கருணாநிதி ஹைடெக் உலகில் தன்னை இணைத்து எக்கச்சக்க இணைய வாழ்த்துகளைப் பெற்று அசத்தினார்.
இதுநாள் வரை இவ்வளவு பாடல்கள் படைப்புகள் என்று எழுதியுள்ள வைரமுத்து தனக்கென அதிகாரபூர்வ இணையதளம் தொடங்காமல் இருந்தார். அதைப்பற்றிக் கேட்ட போதெல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இவ்வளவு அறிவியல் பற்றி எழுதினாலும் விர்ச்சுவல் உலகம் பற்றி விருப்பம் இல்லாமலே இருந்தவர், மேற்கண்ட இரு நிகழ்வுகளால் தனக்கென தனியான தளம் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். அதற்கான முடிவினை எடுத்து விட்டாராம். ட்விட்டர் வரை இப்போது வந்துள்ள வைரமுத்து. இனி சொந்த தளத்ததில் முத்திரை பதிக்கப் போகிறார் என்று நம்பலாம். கவிதை, பாடல், நாவல்.கட்டுரை மட்டுமல்ல இப்போது சிறுகதைகளிலும் முத்திரை பதித்து வருகிற அவர், தனக்கான இணைய தளத்தை தன் மகன் மதன் கார்க்கியை வைத்தே வடிவமைத்து தொடங்க இருக்கிறாராம்.