ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் ஆண்டனியை வைத்து இந்தியா பாகிஸ்தான் படத்தைத் தயாரித்த ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படம் - ஜாக்சன் துரை. நாய்கள் ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் படம் இது. ஜாக்சன் துரை படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு இப்படத்திற்காக கிட்டத்தட்ட 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார் நடிகர் சிபிராஜ். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தரணிதரன். ஏற்கனவே பர்மா என்ற படு தோல்விப்படத்தை இயக்கியவர் இவர். ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு என அருமையான கூட்டணியும் ஜாக்சன் துரையில் இணைந்திருக்கிறது.
தமிழின் தற்போதைய டிரெண்டின்படி ஜாக்சன் துரை படமும் பேய்ப்படம்தான். அதே சமயம், தமிழின் முதல் வரலாற்றுப் பேய் படமாக இப்படமாக உருவாகிறது. 1940களில் நடப்பதுபோல் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிபிராஜுடன் சத்யராஜும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கிறாராம். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பேய்ப்படமான கான்ஜுரிங் படத்தின் ஒப்பனை தொழில்நுட்பத்தை ஜாக்சன் துரை படத்தில் பயன்படுத்தப்படவிருக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஜாக்சன் துரை காமெடி கலந்த திகில் படமாம்.