ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனும் பன்முகம் கொண்ட நடிகர் உபேந்த்ரா, கன்னடத்தில் பல வெற்றிப் படங்களைக் கொண்டுத்தவர். கன்னடத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஷால் - நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சத்யம் படத்தில், உபேந்த்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படத்தில் உபேந்த்ரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கில் இவர் நடித்த S/O சத்யமூர்த்தி படத்தில் இவரது நடிப்பு பேசப்படும்படி அமைந்ததால், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில், 1999 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த உப்பி எனும் கன்னட திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. இதனை தெலுங்கிலும் வெளியிட உபேந்த்ரா திட்டமிட்டுள்ளாராம். சைகோ சம்மந்தப்பட்ட திகில் திரைப்படமான இப்படம் விரைவில் கன்னட மற்றும் தெலுங்கில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.