ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் படம் அண்மையில் வெளியானது. விஜயகாந்தின் சொந்தப்பட நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. கொம்பன், நண்பேன்டா என இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியான அதே தினத்தில் தைரியமாக சகாப்தம் படத்தை ரிலீஸ் செய்தனர். சகாப்தம் படத்தின் ரிசல்ட் விஜயகாந்த் எதிர்பார்த்ததுபோல் இல்லை என்றாலும் ஒரு பட நாயகனான சண்முகப்பாண்டியனுக்கு அதற்குள் ரசிகர்களும்.. ரசிகர் மன்றங்கள் முளைத்துவிட்டன. ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சண்முகப்பாண்டியனுக்கு பிறந்தநாள். அதை முன்னிட்டு சண்முகப்பாண்டியனின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி மக்களை திரும்பிப்பார்க்க வைத்துவிட்டனர். அப்படி என்ன விசேஷம் அந்தப்போஸ்டரில்? புரட்சி கேப்டன் சண்முகப்பாண்டியன்.... ஜூனியர் கேப்டன் சண்முகப்பாண்டியன் என்று அடைமொழிகள் காணப்பட்டன அந்தப் போஸ்டர்களில்.