சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பெங்காலி நடிகை ராதிகா ஆப்தே. இந்திப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மராட்டிய மொழியில் இவர் நடித்த படத்தைத்தான் பிரகாஷ்ராஜ் தமிழில் தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார். மராட்டிய படத்தில் நடித்த பாலியல் தொழிலாளி கேரக்டரை தமிழிலும் நடித்தார். அதன் பிறகு வெற்றிச் செல்வன் என்ற படத்தில் நடித்தார். நீண்ட நாள் கிடப்பில் கிடந்த படம் சென்ற ஆண்டுதான் வெளிவந்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையாவிட்டாலும் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் மட்டும் இவர் நடித்த 4 படங்கள் இந்த ஆண்டு வெளிவருகிறது. தெலுங்கில் ஒரு படமும், தமிழில் உலா என்ற படமும் வெளிவரவேண்டியது இருக்கிறது. இதற்கிடையில் பர்சாத் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தே, லண்டனைச் சேர்ந்த இசை கலைஞர் ஒருவரை காதலிக்கிறார். அவரை பார்க்க அடிக்கடி லண்டன் சென்று விடுவார். தற்போது தன் காதலர் இசை அமைக்கும் ஒரு ஆங்கில நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். லண்டன் தியேட்டர்களில் நடக்கும் இந்த நாடகத்தில் இந்தியாவிலிருந்து லண்டன் சென்று வாழும் பெண்ணாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே, தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து நடிகையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 நாடகங்களில் நடித்துள்ளார். அதனால் நாடகம் அவருக்கு புதிதில்லை.