விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. மார்ச் மாதத்தில் அஜித்தின் அடுத்த படம் ஆரம்பமாக உள்ளது. 'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா - அஜித் மீண்டும் இணையும் இந்தப் படத்தை 'ஆரம்பம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களைத் தயாரித்த ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கான கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், அதற்குள் படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் பரபரப்பாக ஆரம்பமாகிவிட்டது. சில முன்னணி நடிகைகள் ஏற்கெனவே களத்தில் குதித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இல்லை. அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் இவர்கள்தான் ஜோடியாக நடித்துள்ளார்கள். அப்படியென்றால் அந்த வாய்பைப் பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகளில், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர்தான் முன்னணியில் இருக்கிறார்களாம்.
விஜய் தற்போது நடித்து வரும் 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர். அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் ஓரளவிற்கு ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் போட்டி நிறைந்த ஒன்றாகிவிட்டது. ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால் இந்தப் பட்டியலில் இருக்க மாட்டார்கள். விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் இவர்கள்தான் ஜோடியாக நடித்துள்ளார்கள். தமன்னா நடிப்பாரா என்றால் 'சுறா' வந்து பயமுறுத்திவிடும். நயன்தாராவும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
ஆக, விஜய், அஜித் ஜோடியாக அவர்களின் அடுத்த படங்களில் ஜோடியாக நடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்க 'உங்களில் யார் அடுத்த ஜோடி' என ஒரு போட்டியே வைக்கலாம் போலிருக்கிறதே...!