சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரே நடிக்கிறார். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். காஷ்மீரில் இளம் வயதில் தான் தொலைத்த காதலியை தேடுகிற கதை. எஸ்.ஏ.சந்திரசேகரின் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தை கடந்த 2 வருடங்களுக்குமேலாக சத்தமே இல்லாமல் இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். வணிக ரீதியான படங்களை இயக்கும் எஸ்.ஏ.சி, இதனை தனது கனவு படமாகவும், லட்சிய படமாகவும் இயக்கி வருவதாக தெரிவித்திருந்தார். இதுவரை படத்தின் புகைப்படங்களையோ, டிசைன்களையோ, டிரைலரையோ, பாடலையோ வெளியிடவில்லை. இந்த நிலையில் படம் வருகிற 30ந் தேதி வெளிவர இருப்பதாக தெரிகிறது.