மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தங்களது அபிமான நடிகர்கள் நடிக்கும் படங்கள் எப்போது வெளியாகப் போகிறது என்பதை அறிந்து கொள்ள அவரவர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹீரோ நடித்த படமாக இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போதோ, அல்லது படப்பிடிப்பு முடிவடைந்த பிறகோ கூட சரியான, உத்தரவாதமான வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமலே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதியுடன் விளம்பரப்படுத்தப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
தற்போது “ஐ, லிங்கா, உத்தம வில்லன், அனேகன், பூலோகம்,'' ஆகிய படங்களின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் எப்போது வெளியாகும் என்பது இன்னும் சரியாக அறிவிக்கப்படாமலே உள்ளது. இவற்றில் 'பூலோகம்' படத்தின் நிலைதான் பரிதாபகரமானது. இந்தப் படம் பல முறை இந்த மாத வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலையில் உள்ளது. ஆனால், “ஐ, லிங்கா, உத்தம வில்லன்” ஆகிய படங்கள் பெரிய நட்சத்திரங்களுடனும், பெரிய இயக்குனர்களுடனும் உருவாகி வரும் படங்கள். இந்தப் படங்களின் வெளியீட்டைப் பொறுத்துத்தான் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் நினைத்து வருகிறார்களாம். ஆனால், அவர்களோ இன்னும் தேதியை சரியாக அறிவிக்காமல் இருக்கிறார்களே என இவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஹிந்தியில் எந்தப் படம் ஆரம்பமானாலும் இந்த தேதியில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்ற நடைமுறையை பெரும்பாலானோர் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், தமிழில் மட்டும் ஏன் இப்படி தவிக்கிறார்கள். மொத்தமாக 'சரியான திட்டமிடல்' இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.