ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐ படத்தின் இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட் நடிகரான டெர்மினேட்டர் புகழ் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகரை அழைத்த போது ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகரை ஏன் அழைக்க வேண்டும் என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. அதோடு, அவரை 10 கோடி கொடுத்து அழைத்து வருகிறார்கள், 15 கோடி கொடுத்து அழைத்து வருகிறார்கள் என்ற தகவலும் வெளியானது. இதன் பின்னணியில் இருக்கும் விளம்பர டெக்னிக் பலருக்கும் புரியாத ஒன்று. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் இப்படி பலவற்றுக்கும் ஐ படத்தைப் பற்றிய பப்ளிசிட்டிக்கு பட வெளியீட்டுக்கு முன்னர் கொடுத்தால் பல கோடி ரூபாய் வரை செலவாகும்.
ஆனால், இதுவரை யாருமே செய்யாத ஒன்றை செய்து, ஹாலிவுட் நடிகரை அழைக்கும் போது தமிழ்நாட்டு மீடியாக்கள் மட்டுமல்ல, இந்திய, உலக மீடியாக்களும் ஐ படத்தைப் பற்றி எழுதுவார்கள். அந்த விதத்தில் அர்னால்ட் வருகை, ஆர்னால்ட் வீடியோ, அர்னால்ட் புகைப்படம் என கடந்த ஐந்தாறு நாட்களாக சென்னையில் அர்னால்ட் என்பதே செய்தியாக இருந்தது. அதன் பின் அவர் எப்போது சென்னையை விட்டுக் கிளம்பினார் என்பதைக் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.
படத்தின் டீசரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதால் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் படத்தின் வியாபாரப் பேச்சுகள் இப்போது எளிதாக நடக்க ஆரம்பித்துவிட்டதாம். தெலுங்கிலும் படத்திற்கு அமோக வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கு ஏற்கெனவே பெரிய விலைக்கு படம் விற்கப்பட்டுவிட்டது.
இதுக்குப் பேர்தான் சின்ன மீனைப் போட்டு...பெரிய மீனைப் பிடிக்கிறது...ஆனால், இவங்க திமிங்கிலத்தையே பிடிச்சிடுவாங்க போல இருக்கே... !