டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கட்டாயம் பொருந்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆயிரத்தில் ஒருவன். படத் தயாரிப்பில் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கலில் இருந்த பி.ஆர்.பந்தலுவுக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர் தானே முன்வந்து நடித்துக் கொடுத்த படம். இன்றைக்கு பலரது கடனை அடைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கு பி.ஆர்.பந்தலு சிவாஜியை வைத்து தொடர்ந்து படம் எடுத்தவர்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றி புதிய தரமான ஒலிப்பதிவை சேர்த்து மீண்டும் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 தியேட்டர்களில் ரிலீசானது. இன்றைய பெரிய ஹீரோக்கள் படமே 25 நாட்களை தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. மக்கள் திலகத்தின் படம் ஆல்பட் தியேட்டரில் 50 நாள் ஓடி சாதனை படைத்து விட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஆஃப் செஞ்சுரி அடித்ததை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கட்வுட், பாலாபிஷேகம், வாழ்த்து போஸ்டர்கள் என ஆல்பர்ட் வளாகத்தை ஆட்டிபடைத்து விட்டார்கள். நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 50வது நாள் அன்று படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.