Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்துக்காக சூப்பர் ஹிட் டியூன்களை ரெடி பண்ணுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!

17 ஏப், 2014 - 17:47 IST
எழுத்தின் அளவு:

கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் அறிமுகமானவர்தான் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர்.ரகுமானிடத்தில் கீப்போர்டு பிளேயராக இருந்த அவர், தனக்கென ஒரு புதிய பாணியில் அப்படத்துக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்தார். அதனால் அதையடுத்து கெளதம்மேனன்-ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளிமுத்துச்சரம், வாரணம் ஆயிரம் படங்களிலும் தொடர்ந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை நாடினார் கெளதம்மேனன்.


ஆனால், இபபோது தான் இயக்கும அஜீத் படம் மூலம் மீண்டும் ஹாரிஸ்ஜெயராஜூடன் இணைந்திருக்கிறார் கெளதம்மேனன். ஏற்கனவே தாங்கள இணைந்த படங்களில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானதால், இந்த படத்திலும் அது தொடர வேண்டும் என்றும் ஹாரிஸை கேட்டுக்கொண்டுள்ளார் கெளதம்.


அதையடுத்து, தல அஜீத்தை மனதில் கொண்டு ஏராளமான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரைப்பொறுத்தவரை அஜீத்துடன் இணையும் முதல் படம் என்பதால், அஜீத்தும், கெளதம்மேனனும் எதிர்பார்ப்பதை விடவும் பிரமாதமான பாடல்களை கொடுத்து விட வேணடும் என்று தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.


அதனால், இதற்கு முன்புவரை ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப ஸ்லோவாகத்தான் இசையமைத்துக் கொடுப்பார் என்று அவரை குற்றம் குறை சொல்லிக்கொண்டு வேறு இசையமைப்பாளர்களிடம் சென்று கொண்டிருநத டைரக்டர்கள், அவரது இந்த புதிய வேகம் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்து நிற்கிறார்கள். அந்த அளவுக்கு ராத்திரி பகலாக தூக்கத்தைகூட ஓரங்கட்டி வைத்துவிட்டு பாடல்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஹாரிஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in