ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதையடுத்து, மதுர, கோவில், 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே என பல படங்களில் நடித்தார். பின்னர் தன்னை தமிழில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு, விவகாரத்து பெற்றனர்.
அதையடுத்து, தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலியை மறுமணம் செய்து கொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வால் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவர், வானம், சதுரங்கம் உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்தவர், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் மீண்டும் நாயகியாக நடித்தார்.
அதைத் தொடர்ந்து ஹீரோயினியாகவே நடிப்பேன் என்று அவர் அடம்பிடித்ததால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் தற்போது பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் மடிசார் மாமி கெட்டப்பில் நடித்துள்ளார் சோனியா அகர்வால். இந்த படத்தில் அவருக்கு டூயட் பாடல்கூட உள்ளதாம்.
இப்படத்தில் தான் நடித்தது பற்றி சோனியா அகர்வால் கூறுகையில், இதுவரை காதல் கதைகளில்தான் அதிகமாக நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் நல்லதொரு குடும்பத் தலைவியாக கூடுதல் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளேன். முதல்முதலாக ஒரு படம் முழுக்க மடிசார் புடவை அணிந்து நடித்திருப்பது எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, எனக்குள் இருந்த வித்தியாசமான நடிப்பாற்றலையும வெளிக்கொண்டு வந்துள்ளது. அதனால், இதன்பிறகு தென்னிந்திய சினிமா உலகம் என்னை மாறுபட்ட நடிகையாக அங்கீகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்.