Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணீர் விட்ட கார்த்திக் ராஜா ,கைகொடுத்த மலேசிய மக்கள்

29 டிச, 2013 - 08:15 IST
எழுத்தின் அளவு:

கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 27ம் தேதி இளையராஜா
தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ:
யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி கொடுத்து வருகிறார், இளையராஜாவுடன் மருத்துவமனையில் இருந்த கார்த்திக்ராஜா , சில தினங்களாக இசை பயிற்சி கொடுத்து வருகிறார். காலையில் தொடங்கி, மலேசிய நேரப்படி மாலை நிகழ்ச்சி நடக்கும் 30 நிமிடங்கள் வரை, இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார்.
மேரடிகா ஸ்டேடியத்தில் மலேசிய நேரப்படி சரியாக இரவு 7.20 மணிக்கு மின்னல் எப் எம் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொடங்கினர். கூட்டம் நிரம்பி வழிந்தது; பக்கத்தில் இருக்கும் நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டனர்; அந்த கூட்டத்தினர் இடையே பிளாஷ் மொபோ டான்ஸ் வழங்கினர்.
இதில் ராஜாவின் பாடல்கள், ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா, வச்சிக்கவா உன்னை மட்டும், மைனா மைனா மாமன் புடிச்ச மைனா, இளமை இதோ போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் முன்னிலையில் ஆடினர்.
சரியாக மலேசிய நேரப்படி இரவு 7.55 மணிக்கு கார்த்திக் ராஜா மேடைக்கு வந்தார். வணக்கம் தெரிவித்து நமசிவாய வாழ்க என்று, இறைவணக்கம் பாடினார். இதை அடுத்து இளையராஜா
திரையில் தோன்றினார். ஜனனி ஜனனி என்று பாடலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி அனைத்தும் நேரடியாக இளைய ராஜாவுக்கு இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியை பார்த்து இடையில் சில நிமிடங்கள் பேசினார். நான் எப்படியாவது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் அறிவுரைப் படி வர முடியவில்லை ,நான் அங்கேதான் இருக்கேன் எந்த குறையும் இல்லை , நிகழ்ச்சியை கார்த்திக் சிறப்பாக நடத்துவார் அவர்க்கு என் வாழ்த்துக்கள் என்றார். ஜனனி பாடலை பவதாரிணி, கார்த்திக் ராஜா பாடி முடித்தனர். பாடலை அடுத்து பேசிய கார்த்திக் ராஜா, 100 ஆண்டு கால இந்திய சினிமாவில், இசையில் 30, 40 வருஷத்தில் அப்பாவின் பங்கை எடுத்திட்டா, என்ன இருக்குமுன்னு உங்களுக்கே தெரியும், நான் இங்க மகனா பேசல, ரசிகனா பேசுறேன், அப்படி இசையை கொடுத்தவர் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோகிராம் பண்ணும் போது பக்கத்தில் இருந்து பார்த்தபோது என்னால் முடியல, என்று கண்ணீர் விட்டு அழுதவரை வெங்கட் பிரபு மேடைக்கு வந்து தைரியம் கொடுத்து சென்றார்.
இதை அடுத்து பேசிய கார்த்திக், இந்த மேடை அப்பா இல்லாமல் வெறுமையாக இருக்கு, நான் இதை ஒத்துக்குறேன் , இங்க இல்லனாலும் ,அவங்க மனசு முழுக்க இங்க தான் இருக்கு , ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது ஷோவுக்கு போய்டனும்பா, என்று பலமுறை சொன்னார், இபோதைக்கு அப்பாவை ரீ- பிளேஸ் பண்ண முடியாது, அதனால் எங்களால் முடிந்ததை கொடுக்கிறோம் என்றார்.
தொடர்ந்து ஹரி சரண் மற்றும் குழுவினர் ராஜா சார் வணங்கும் அண்ணாமலையார் பாடல் ஒம் சிவ ஓம் என்று அரங்கம் அதிர பாடினார், இதை அடுத்து நடிகை சுகாசினி மேடைக்கு வந்தார் , தான் ராஜாவின் ரசிகை , உடல் முழுக்க அவர் ரத்தம் தான் ஓடுறது என்றார் , நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் , இதை தொடர்ந்து தன் அம்மாவிற்காக கார்த்திக் ,யுவன் ,பவதாரிணி, அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே பாடலை பாடினர்.
நிகழ்ச்சில அடுத்து பேசிய சுஹாசினி , எனக்கு குழந்தை பிறக்கும் முன் தங்க காப்பு அம்மா தான் போட்டாங்க. ஆனா தங்கம் மாதிரி 3 குழந்தைகள கொடுத்திருக்காங்க, நீங்க சொலுங்க அம்மா
பத்தி என்றதும், யுவன் சொன்னார் நான் இசையை முறைப்படி படிக்கல , அம்மா தான்
உன்னால் முடியும், வெளுத்து வாங்கு யுவன் என்று என்னை உற்சாக படுத்தினார். அம்மா இல்லைனா இன்று இந்த யுவன் இல்லை என்றார், கார்த்திக் சொல்லும்போது அம்மாக்கு நாங்கள் டார்ச்சர் தான் கொடுதிருக்கோம் என்றார், பவா சொல்லும்போது நான் பாடகி ஆனதுக்கு அம்மாதான் காரணம் என்றார். இப்படி அப்பா, அம்மா அழகான வாழ்க்கை கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் என்றார் சுகாசினி.
அடுத்து மேடைக்கு வந்த எஸ் பி பாலசுப்ரமணியம், தோளின் மேலே பாரம் இல்லை, கேள்வி கேட்க ராஜா இல்லை என்று பாடினார், அடுத்து அவர் பேசும்போது இந்த சூழ்நிலை மிக வருத்தமானது, ராஜா மேடையில் இருக்கும் போதே மைக் பிடிக்கமாட்டார் கார்த்திக், அவர் பிறக்காத போதே எங்கள் நட்பு உண்டு, எனக்காக ராஜா பிறந்தாரா? ராஜாவுக்காக நான் பிறந்தேனா தெரியல, ஆஸ்பத்திரில நான் பார்க்க போனப்ப ,டேய் டாக்டர் கிட்ட சொல்லுடா, நாம கச்சேரி போயிட்டு வந்திடலாம், என்று எவ்வளவோ முயற்சி பண்ணான், நான் ராஜா இல்லாம எந்த ஷோவ்யும் பண்ணதில்லை, 2 இறக்கை முளைத்தால் ஓடி வந்திடுவான், அவன் 100 வருஷம் நல்லபடி வாழணும்னு வேண்டிக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த ராஜா ரசிகர்களிடம் பேசினார், அப்போது ,தோளின் மேலே பாரம் இல்லை, கேள்வி கேட்க ராஜா இல்லைன்னு பாடினான், நான் கேள்வி கேக்கலனா அப்படி ஒரு பாட்டு வந்திருக்குமா, 2000 பாட்டுக்கு மேல என் பாடல்களை பதிவிறக்கம் பண்ணி கேக்குறாங்க , எனக்கு என்ன கொடுக்கிறாங்க ,அவங்க கிட்ட இருந்து நான் வாங்க கூடாது, அவர்களுக்கு நான் தான் கொடுக்கணும் என்றார் , அப்பா பேசியதுக்கு பதில் சொன்ன கார்த்திக்
உலகத்தில் மக்களுக்கு அன்பு , காற்று , நீர் எப்டி காசு இல்லாம இலவசமா கிடைக்குதோ அதை போல உங்கள் இசையும் கிடைக்கணும்பா என்றதும் , அரங்கில் கை தட்டல் ...
நிகழ்ச்சியில் மனோ ஒ பிரியா பிரியா ,என் கண்மணி , செண்பகமே ,போன்ற பல பாடல்களை , காமெடி கலந்து பாடி ரசிகர்களை உற்சாக படுத்தினார் , பாலு , சின்ன மணி குயிலு , என்ன சத்தம் இந்த நேரம் ,சந்தைக்கு வந்த கிளி ,வனிதாமணி , ஜெர்மனியின் ,இளமை இதோ பாடல்களையும் , சித்ரா, ஓ பிரியா தென்றல் வந்து ,போன்ற பாடல்களையும் , கிருஷ் பனிவிழும் நிலவு ,பேர்
வச்சாலும் பாடல்களையும்,உமா ரமணன் ம், ஆனந்த ராகம் பாடலையும் ,,ஆலப் ராஜ் ,ஷாலினி வெட்டி வேரு வாசம் பாடலையும் ,யுகேந்திரன் பொதுவாக எம் மனசு தங்கம் பாடலையும் , வெங்கட்பிரபு சொர்கமே என்றாலும் பாட்டையும் ,யுவன் தென்றல் வந்து ,நிலா அது போன்ற பாடல்களையும் , பவதாரிணி ,ரம்யா ,சத்யன் ,ரீட்டா ,அனிதா ,ஹரி சரண் ,செந்தில் தாஸ் ,பிரேம்ஜி ஆகிய பாடகர்களும் ராஜா பாடல்களை பாடினர்
விழாவில் வாலி ,பாவலர் , ஸ்வர்ணலதா , மலேசியா வாசுதேவன் போன்றவர்களுக்கு
நினைவு வணக்கம் செலுத்தப் பட்டது , முக்கிய நிகழ்வாக இந்நிகழ்ச்சியில் வந்த வருமானத்தில் ஒரு பகுதி பார்வையற்றவர்களுக்கு வழங்கப் பட்டது , இந்த விழா வில் ,நடிகை ஜெயஸ்ரீ ,ராம்கி ,நிரோஷா , வாசுகிபாஸ்கர் , வெங்கட் பிரபு குழுவினர் பலரும் கலந்து கொண்டனர் , நிகழ்ச்சி மலேசிய நேரப்படி இரவு 12.30 மணிக்கு முடிக்க அனுமதி கொடுக்கப் பட்டது , ஆனாலும்
மக்கள் கலைய வில்லை, விழா சூடு பிடித்தது , கடைசி 15 நிமிடங்கள் ரசிகர்கள் உற்சாக படுத்த , மேடையில் அத்தனை பாடகர்களும் வந்து ஹிட் பாடல்கள் சில வரிகளை அரங்கம் அதிர ரசிகர்களின் கைதட்டல்களோடு ஹாப்பி நியூ சொல்லி , சரியாக இரவு 1 மணிக்கு பாடி முடித்தனர் , வீடு செல்ல மனசே இல்லாதபடி ராஜாவின் இசையை ஒருவரின் மனசிலும் எடுத்து சென்றதை நாம் அரங்கில் இருந்து பார்க்க முடிந்தது , கிங் ஆப் கிங்ஸ் இசை வென்றது .

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Jothi - PUDUCHERRY,இந்தியா
30 டிச, 2013 - 15:43 Report Abuse
Jothi அண்ணாமலையார் அருள் எப்போதும் இசை ராஜா அவர்களுக்கு உண்டு நீடூழி வாழ்வார் - ஆனந்தஜோதி பாண்டிச்சேரி
Rate this:
raguh - arakkonam  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 13:06 Report Abuse
raguh raja is the best
Rate this:
kumarasamy, Ramnad. - Rmd,இந்தியா
30 டிச, 2013 - 11:31 Report Abuse
kumarasamy, Ramnad. அய்யா உங்கள் வீட்டில் ஆபீஸ் பாய் ஆக 1997-1998 வேலை பார்த்த முறையில் சொல்லுறேன் நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் மேன்மேலும் பிணி இல்லாமல் வாழ சிவ பெருமானை வேண்டுகிறேன். கார்த்திக் சார், யுவன் சார், பவதா மேடம் அனைவருக்கும் வணக்கம். ஓம் நமசிவய.
Rate this:
amma amma - Kumbakonam,இந்தியா
30 டிச, 2013 - 11:02 Report Abuse
amma amma கார்த்திக்ராஜா புகழ் பெற வில்லை என்ற ஓரே கவலை ராஜாவுக்கு இருந்து இருக்கும் .மலேசியா வி ழா அதனை போ க்கி இருக்கும் .தான் என்ற கர்வம் இருந்தாலும் ராஜா ராஜாதான் .தான் என்ற கர்வத்திற்கு அவரது ஆரம்ப கால அவமதிப்புகள் காரணமாக இருந்து இருக்கலாம்
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
30 டிச, 2013 - 11:02 Report Abuse
JAIRAJ மெல்லத்திறந்தது கதவு. .......................கண்ணுங்களா தந்தையின் இடத்தைப் பூர்த்தி செய்து மக்களை மகிழ்வித்த மகன்களே..............பொறுப்புடன் நீங்கள் பணியாற்றியது பெருமை. ( எல்லோருக்குமே ) தங்கள் தந்தை விரைவில் பரிபூரண குணம் அடைந்து நல்ல நலத்துடன் வீடு திரும்ப எல்லோரும் பிரார்த்தானை செய்கின்றோம்.....................தென்றல் வந்து என்னைத்தொடும்.............அஹா........சத்தமின்றி முத்தமிடும்.............துயரே போய்விடு................நலமே தொடர்ந்திடு........................வளமே ..........எந்நாளும் குறையாமல் இருந்திடு...................
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in