மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இந்தியத் திரையுலகத்தில் யு டியூபின் பங்கு மிகவும் மகத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த செலவும் இல்லாமல் ஒரு பக்கம் நல்ல வருமானத்தையும், மற்றொரு பக்கம் நல்ல விளம்பரத்தையும் பல திரைப்படங்கள் அதன் மூலம் பெற்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக புதிய படங்களின் டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள் என பல வீடியோக்கள் யு டியூபின் சர்வருக்குள் நுழைந்து வருகின்றன. இதையெல்லாம் பார்த்து யு டியூப் சர்வர்கள் ஆடிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடவில்லை என்றாலும் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' பட டிரைலர் யு டியூபில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. முதல் முறையாக ஒரு இந்தியப் பட டிரைலர் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் யு டியூபில் பதிவேற்றப்பட்ட இந்த டிரைலர் 2 மாதங்களுக்குள்ளாக அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இத்தனை நாட்களாக டப்பிங் படமான 'பாகுபலி 2' பட டிரைலர் தான் ஹிந்திப் படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலராக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இழந்த ஹிந்திப் படங்களின் பெருமையை 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' மீட்டுக் கொண்டு வந்துள்ளது.
'பாகுபலி 2' படம் அளவிற்கு இனி வேறு தென்னிந்தியப் படங்கள் ஹிந்தியிலும் சாதனை படைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், இன்னும் கொஞ்ச நாளைக்கு 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' டிரைலர் அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
'ஜீரோ' பட டிரைலர் 9 கோடிய 31 லட்சம் பார்வைகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த டிரைலர் விரைவில் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.