ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை ஸ்ரீதேவியின் திடீர் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான தங்களின் அதிர்ச்சியையும், வேதனையையும் திரைபிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 275 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2012 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். கடந்த ஆண்டு அவர் நடித்த மாம் படம் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், அதன் பிறகு எந்த படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா நடித்த ஜீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டது. அவரும் அதனை ஏற்று நடித்தார். இப்படத்தில், நடிகை ஸ்ரீதேவியாகவே அவர் நடித்துள்ளார். படத்தில், பார்ட்டி ஒன்றில் ஸ்ரீதேவி கலந்து கொள்வது போன்ற காட்சியில் நடித்துள்ளார். அவருடன் ஷாருக்கான், ஆலியா பட், கரிஷ்மா கபூர் ஆகியோரும் இக்காட்சியில் நடித்துள்ளனர்.
இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் விரைவில் ரிலீசாக உள்ள ஜீரோ, ஸ்ரீதேவி நடித்த கடைசி படமாக அமைந்துள்ளது.