சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சல்மான்கான் நடித்து வரும் படம் டைகர் ஜிந்தா ஹே. ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். சல்மான்கானுடன் கத்ரீனா கைப், சுதீப், அன்கட் பேடி, கிரிஷ் கர்நாட் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் டிசம்பர் 22ந் தேதி வெளிவருகிறது. இது ஹாலிவுட் படமான கமாண்டோ பாணியிலான பக்கா ஆக்ஷன் படம். இதன் கிளைமாக்ஸ் தற்போது படமாகி வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சல்மான்கான் நவீன துப்பாக்கி கொண்டு 5 ஆயிரம் முறை சுடுகிறார். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி தான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. இது போன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல. MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல் 30 கிலோ இருக்கும். இதனுடன் தோட்டாக்களை கொண்ட மேகஸீன்களை இணைக்கும் போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.
படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்தக் காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இக்காட்சிகள் தொடர்ந்து 3 நாள்களுக்கு படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்நிகழ்வு இருந்தது. ஏனெனில் இந்தக் காட்சிகள் வெப்பமான இடத்தில் படம்பிடிக்கப்பட்டதோடு, கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகி விடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில் படமாக்கினோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.