அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'ராப்தா' படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் அதில் வரும் ஒரு வித்தியாசமான மனித உருவத்தை பார்த்து ஒரு கணம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.. சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரீத்தி சனான் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தை தினேஷ் விஜன் என்பவர் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தில் தீபிகா படுகோனேவும் ராஜகுமார் ராவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்..
இப்போது மேலே சொன்ன ஆச்சரயமான விஷயத்துக்கு வருவோம்.. ட்ரெய்லரில் தென்பட்ட அந்த விசித்திர உருவத்துக்கு சொந்தக்காரர் இந்த ராஜ்குமார் ராவ். 32 வயதேயான ராஜ்குமார் ராவ் 324 வயது மனிதனாக இந்தப்படத்தில் நடித்துள்ளது இந்தப்படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று. இந்த தோற்றத்தை கொண்டு வருவதற்காக சுமார் ஆறுமணி நேரத்திற்கு மேலாக மேக்கப்பிற்கு ஒத்துழைத்துள்ளார் ராஜ்குமார் ராவ். இந்த மேக்கப்பிற்காவே லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஒரு ஸ்பெஷல் டீமை வரவழைத்தார்களாம்.