ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், சாஹித் கபூர், கங்கனா மற்றும் சைப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ரங்கூன்'. சாஹித், கங்கனா மற்றும் சைப் மூவரும் வித்தியாசமான கதை களத்தில் நடித்துள்ளனர் என்று விஷால் கூறியிருந்தார். இதனிடையே, ‛ரங்கூன்' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலரை பார்த்து சிலர் இப்படம் சுயசரிதை படமா என்று கேட்க துவங்கியுள்ளனர். ஆனால் இதை இயக்குநர் விஷால் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி விஷால் மேலும் கூறியதாவது..... "இப்படம் கண்டிப்பாக சுயசரிதை படம் கிடையாது. இது ஒரு முக்கோண காதல் கதை, அது இரண்டாம் உலகப்போரின் போது நடப்பது போன்று இருக்கும்'' என்று கூறினார்.
‛ரங்கூன்' படம் அடுத்த மாதம், 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.