ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் அனுபவம் சின்ஹா இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளியான படம் தும் பின். அதன்பின் கேஸ், ரா ஒன் போன்ற படங்களை இயக்கியவர் இப்போது தும் பின் 2 படத்தை மும்முரமாய் இயக்கி வருகிறார். இதில் நேகா சர்மா, அசீம் குலாதி, ஆதித்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படம் ‛தும் பின்' படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குநர் அனுபவ் சின்ஹா மறுத்துள்ளார்.
இதைப்பற்றி அனுபவ், தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய டைம் லைனில் தும் பின்-2 படம் பற்றிய கேள்வி தான் அதிகம் குவிந்துள்ளது. தும் பின் 2, தும் பின் படத்தின் தொடர்ச்சி கிடையாது. ஆனால் இது வேறுவிதமான கதை. இது ஒரு முக்கோண காதல் கதை, ஸ்காட்லாண்டில் படமாகிறது'' என்று கூறியுள்ளார்.
தும் பின்-2 படம் வருகிற நவ., 18-ம் தேதி, போர்ஸ்-2 படத்துடன் ரிலீஸாக உள்ளது.