பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் யாமி கவுதம் நடித்து வரும் படம் காபில் . சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு ஹிருத்திக்கின் உடல்நலக் குறைவு காரணமாக தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுப்பற்றி சமீபத்தில் யாமி கவுதமிடம் கேட்டபோது அவர் மறுத்தார்.
இதுப்பற்றி யாமி மேலும் கூறியதாவது..."படம் தடைப்பட்டதாக வந்த செய்தி முற்றிலும் பொய். உண்மையில், படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தில் ஒரு பாடலின் ஷூட் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நான் முன்பே கூறியது போல் ஹிருத்திக்குடன் நடிப்பது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கிறது. குறிப்பாக அவருடன் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதை திரையில் காண ஆர்வமாய் உள்ளேன்" என்றார்.
‛காபில்' படம் அடுத்த ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.