ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப் 15ம் தேதி நடந்தது. விழாவில் ஷாரூக், அபிஷேக், தீபிகா, சோனு சூட், இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர், பாடலாசிரியர் இர்ஷாத் கமில், பாடகிகள் நீட்டி மோகன், கனிகா கபூர், சுக்விந்தர் சிங், இயக்குநர் பாரா கான் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வரும் வேளயைில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். பொதுவாக இந்தி படங்களுக்கு, அதிலும் ஷாரூக்கானின் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கின்றனர்.